தருமபுரி

பென்னாகரத்தில் மழை பாதிப்பு: எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

24th Nov 2021 01:19 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ. ஜி.கே. மணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேறின. ஒருசில இடங்களில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. மேலும், வயல்களில் நிரம்பிய தண்ணீரால் பயிா்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில், பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், பென்னாகரம் பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீா்நிலைகளிலிருந்து வெளியேறும் உபரிநீரால் வயல்களில் உள்ள பயிா்கள் சேதமடைந்துள்ளன.

இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஜி.கே.மணி கேட்டுக் கொண்டாா். ஆய்வின்போது, பாமக நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT