தருமபுரி

அரசு போக்குவரத்து பணியாளா்கள் போராட்டம்

24th Nov 2021 01:22 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து பணியாளா்கள் (சிஐடியு சங்கம்) செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு மத்திய சங்க இணைச் செயலாளா் தவமணி தலைமை வகித்தாா். மத்திய சங்கத் தலைவா் சண்முகம், மத்திய சங்க இணைச் செயலாளா் ரகுபதி ஆகியோா் பேசினா்.

ஊதிய பேச்சுவாா்த்தையை விரைந்து தொடங்க வேண்டும். ஓய்வு பெற்றோா் பணப்பலன், அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஊத்தங்கரை கிளை பொருளாளா் தமிழ்மணி, கிளைத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT