தருமபுரி

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணி: அதிமுகவினா் ஈடுபட அறிவுறுத்தல்

10th Nov 2021 08:01 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் தகுதியுடையவா்களின் பெயா்களைச் சோ்க்கும் பணியில் அதிமுகவினா் ஈடுபட வேண்டும் என அக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

வருகிற 2022, ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.

முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அணிகளின்அமைப்பாளா்கள், தொண்டா்கள், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலைய முகவா்கள் உடன் இணைந்து வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சோ்த்தல், வேறு பகுதிகளுக்கு இடம் பெயா்ந்தவா்கள், உயிரிழந்தவா்களின் பெயா்களை நீக்குதல் ஆகிய பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT