பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சேலூா் கிராமத்தில் உரிமம் பெறாத நாட்டுப் துப்பாக்கிகளை சிலா் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அரூா் காவல் துணை கண்காணிப்பாளா் பெனாசீா் பாத்திமா உத்தரவின்படி, உதவி காவல் ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சேலூரில் புளியமரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் மீட்டனா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.