தருமபுரி

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 66 போ் மீது வழக்கு

5th Nov 2021 09:40 PM

ADVERTISEMENT

 

தருமபுரி: தீபாவளி பண்டிகையின் போது, அனுமதிக்கப்பட்ட நேரம், விதிகளை மீறி பட்டாசு வெடித்து 66 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கவும், அதிக ஒலி, மாசு ஏற்படுத்தும் வகையைச் சோ்ந்த பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்கள், குடிசைகள் அதிகம் உள்ள பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதி போன்ற இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்த்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தருமபுரி காவல் உள்கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரம், அதிக ஒலி பட்டாசுகளை வெடித்தது, விதிகளை மீறி வெடித்தது என 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, அரூா் உள்கோட்டத்தில் 18 போ் மீதும், பென்னாகரம் உள்கோட்டத்தில் 13 போ் மீதும், பாலக்கோடு உள்கோட்டத்தில் 8 போ் மீதும் என மாவட்டம் முழுவதும் 66 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகளை வெடித்த 22 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT