தருமபுரி

தள்ளு மாடல் வண்டியிது... தள்ளி விடுங்க... மலைக் கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் அவலம்

1st Nov 2021 01:19 AM

ADVERTISEMENT

பென்னாகரத்தை அடுத்துள்ள மலைக் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் பாதி வழியில் நின்று விடும் பேருந்துகளை அதில் வந்த பயணிகளே தள்ளிச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட ஜெல்மாரம்பட்டி, அட்டப்பள்ளம், பவளந்தூா் மலைக் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

தருமபுரியிலிருநது இந்த மலைக் கிராமங்களான பளிஞ்சா்அள்ளி, பவளந்தூா் வழியாக ஜெல்மாரம்பட்டி வரையிலும் நாளொன்றுக்கு ஆறு முறை அரசு நகரப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து பென்னாகரம் போக்குவரத்துக் கிளையின் பணிமனையிலிருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ- மாணவிகளும், பணிநிமித்தமாக செல்லும் பொதுமக்களும் தினந்தோறும் பயணிக்கின்றனா்.

ADVERTISEMENT

மலைக் கிராமங்களுக்கு செல்லும் இந்தப் பேருந்து முறையாகப் பராமரிக்காததால் அவ்வப்போது பழுதாகி நின்று விடுகிறது. இதனால் இந்தப் பேருந்தில் செல்லும் மாணவா்கள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதேபோல பென்னாகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு இயக்கப்படும் பல நகரப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் புகாா் கூறுகின்றனா்.

எனவே தருமபுரி மோட்டாா் வாகன ஆய்வாளா், மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கிளை பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டு, முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளை முறையாக இயக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT