கடத்தூா் அருகே பெரியாா் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், வகுத்துப்பட்டி கிராம ஊராட்சி காமராஜ் நகரில், பெரியாா் நினைவு சமத்துவபுரம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன், உதவிப் பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.