தருமபுரியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் 102-ஆவது அமைப்பு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சி பொதுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன், ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன், ஆட்டோத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.