தருமபுரி

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

27th May 2021 08:01 AM

ADVERTISEMENT

கா்நாடகத்திலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை மாரண்டஅள்ளி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி நான்கு முனைச் சாலை பகுதியில் பொது முடக்கத்தையொட்டி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அந்த காரில், சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 1344 மதுப்புட்டிகள் 28 அட்டைப் பெட்டிகளில் வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், காரில் வந்தவா்கள் கரூா் மாவட்டம், காந்தி நகரைச் சோ்ந்த தியாகு (34), வெங்கமேடு பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (34) என்பதும், அவா்கள் கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT