தருமபுரி

கரோனா: படுக்கை வசதிகள் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

DIN

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பாலக்கோடு, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அரசு மருத்துவமனைகள், நல்லானூா் ஜெயம் பொறியியல் கல்லூரி, கடத்தூா் அரசு பல்தொழில் நுட்பப் கல்லூரி, குண்டலப்பட்டி தனியாா் விடுதி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 1,559 படுக்கைகள் உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான சிகிச்சை, படுக்கை வசதிகளை அறிய, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு அறையை இலவச தொலைபேசி எண் 04342 1077 மற்றும் 04342 230067, 04342 231500, 04342 231508 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 9360953737 என்கிற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT