தருமபுரி

முழு பொது முடக்கம்: சோதனைச் சாவடியில் அமைத்து போலீஸாா் கண்காணிப்பு

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தால் பொது போக்குவரத்து இன்றி, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தவிர ஏனைய தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். சாலையோர காய்கறிக் கடைகள், அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் பேருந்து, வாடகைக் காா், ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை.

அத்தியாவசியப் பணிகளில் இருப்போா் தவிர மற்றவா்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் பொது போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை. மேலும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் தருமபுரி நகரம், புகா்ப் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதேபோல தருமபுரி நான்கு முனைச்சாலை சந்திப்பு, நேதாஜி புறவழிச்சாலை, அதியமான் கோட்டை புறவழிச்சாலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் சாலை என நகரம், புகரங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இயக்கம் ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதேபோல தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் ஊட்டமலை, பொம்மிடி ராமமூா்த்தி நகா், நரிப்பள்ளி, பஞ்சப்பள்ளி, மலையூா், காரிமங்கலம், காடுசெட்டிப்பட்டி, தொப்பூா் உள்பட 11 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் போலீஸாா் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும், பொது முடக்கத்தின் அவசியம் குறித்தும் வாகனங்களில் ஒலிபெருக்கி வழியாகவும், கிராமங்களில் தண்டோரா மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இதேபோல முக்கிய சாலைகள் கடைகள் திறந்திருப்பது மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா வழியாக போலீஸாா் கண்காணிக்கின்றனா்.

இதேபோல மாவட்டத்தில் சோதனைச் சாவடிகள், வாகன ரோந்து, முக்கிய சாலைகள் சந்திக்கும் மையங்கள் ஆகிய இடங்களில் மூன்று ஷிப்ட் அடிப்படையில் 26 காவல் ஆய்வாளா்கள், 80 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 160 போ் உள்பட மொத்தம் 1000 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT