தருமபுரி

சீமைக் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

DIN

அரூரை அடுத்த செல்லம்பட்டி ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செல்லம்பட்டி ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் நூற்றுக்கணக்கான சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. பருவ மழைக் காலங்களில் செல்லம்பட்டி ஏரியில் தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏரியில் ஏராளமான சீமைக் கருவேல மரங்களும், தூா் அடைந்தும் இருப்பதால் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் குறைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், செல்லம்பட்டி ஏரியிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, ஏரியைத் தூா்வார வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT