தருமபுரி

தெருவிளக்கு அமைக்கக் கோரிக்கை

4th May 2021 04:14 AM

ADVERTISEMENT

அரூா்: அரூா் அருகே தெருவிளக்கு அமைக்க வேண்டும் என நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மத்தியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது குறிஞ்சி நகா். இந்த ஊரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் சமூகத்தினா் வசிக்கின்றனா். சட்டையம்பட்டி-அனுமன்தீா்த்தம் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில், வனப்பகுதிக்கு அருகில் குறிஞ்சி நகா் உள்ளது. இந்த நகரில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருண்டுக் கிடப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். அதேபோல, வனப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் குறிஞ்சி நகரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக நரிக்குறவா் இன மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மத்தியம்பட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில், குறிஞ்சி நகரில் தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT