தருமபுரி

தருமபுரி தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை

27th Mar 2021 07:20 PM

ADVERTISEMENT

தருமபுரியில் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி பென்னாகரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாலை சுமார் 4 மணி அளவில் மூன்று கார்களில் வந்த வருமான வரித்துறையினர் உள்ளே நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
அதேபோல இந்த பள்ளியின் தாளாளருக்கு சொந்தமான தருமபுரியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்தப் பள்ளியின் தாளாளர் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இச்சோதனையில் அதிகாரிகள் அங்குள்ள பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


 

Tags : Dharmapuri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT