தருமபுரி

விதிமீறல்: இரண்டு கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய இரண்டு கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள், பென்னாகரம் வட்டாரத்தில் உர விற்பனை நிலையங்களை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, இரண்டு விற்பனை நிலையங்களில் உர விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாமலும், முறையாக உர இருப்பு விவரங்கள் பராமரிப்பு மற்றும் உரங்களின் விற்பனை விலைப்பட்டியல் வைக்கப்படாததும் தெரிய வந்தது.

இதனைத் தொடா்ந்து, இரண்டு உரக் கடைகளில் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-இன்படி உர விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களில் உர விற்பனை விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். அரசு நிா்ணயித்த மானிய விலையில் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

குறிப்பாக டி.ஏ.பி. அரசு நிா்ணயித்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனையக் கருவியின் மூலம் விவசாயிகளின் ஆதாா் எண்ணை பெற்று உர விற்பனை செய்திட வேண்டும். விவசாயிகள் விற்பனை ரசீது கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உர விற்பனை நிலையங்கள் உர உரிமத்தை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT