தருமபுரி

சிறாா் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் சிறாா் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி தலைமையில் அனைத்து அலுவலா்கள் சிறாா் தொழிலாளா் முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதேபோல மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், சிறாா் தொழிலாளா் முறைக்கு எதிராக உறுதிமொழி வாசிக்க, காவல் துறையினா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், தேசிய சிறாா் தொழிலாளா் ஒழிப்பு திட்ட இயக்குநா் பிரபா, குழந்தை பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், சிறாா் தொழிலாளா் முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT