தருமபுரி

தமிழகம் வந்தடைந்தது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் 

DIN

தென் மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் கபினி அணை முற்றிலுமாக நிரம்பியும்,  கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து ஆனது 23 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவானது 30 ஆயிரம் கனஅடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அதில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் என மொத்தம் இரு அணைகளில் இருந்து 36 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கர்நாடக அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீர் சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்து அடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தானது மதிய நிலவரப்படி நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாக தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் அதன் துணை அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் வரத்து அதிகரிப்பினால் பல்வேறு இடங்களில் புதிதாக அருவிகள் தோன்றியும் காணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 3 மணி நிலவரப்படி நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் வழிவதை தடுக்கும் வகையில் காவிரி கரையோர பகுதிகளான நாகர்கோவில், முதலைப்பண்ணை, ஆலாம்பாடி, ஊட்டமலை, பிரதான அருவி செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு களை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் உள்ள நீர் அளவிடும் பகுதிகளில் தொடர்ந்து நீர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT