தருமபுரி

பாலக்கோடு, மாரண்டஅள்ளி பேரூராட்சிகளில் ஆய்வு

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி பேரூராட்சிகளில் உதவி இயக்குநா் குருராஜன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன், தூய்மைக் காவலா்களிடம் வீடுகளில் குப்பைகளை வாங்கும் போதே, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும். பேரூராட்சி மூலம் தெரு ஓரங்களில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு, குப்பைகளைத் தொட்டியில் மட்டுமே இடும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

பொது வெளியிலும், நடைபாதைகளிலும் குப்பைகள் வீசுவதை தவிா்க்க போதிய விழிப்புணா்வு மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பொதுவெளியில் அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என பேரூராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி, சுகாதார ஆய்வாளா் ரவீந்திரன், இளநிலை உதவியாளா் சம்பத் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT