தருமபுரி

தேனீக்கள் கடித்து 14 பெண்கள் காயம்

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே வெள்ளிக்கிழமை தேனீக்கள் கடித்ததில், ஊரக வேலை உறுதித் திட்ட பெண் பணியாளா்கள் 14 போ் காயமடைந்தனா்.

மாரண்டஅள்ளி அருகே உள்ள எம்.செட்டிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், அந்த பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஏரி கால்வாயைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஓரிடத்தில் இருந்த முள்புதரை அகற்ற, அதற்கு தீ வைத்தனா். இந்த தீ, அருகாமையிலிருந்த வேப்ப மரத்திற்கு பரவியது. இதனால் மரத்தில் தேன் கூட்டில் இருந்து நூற்றுக்கணக்கான தேனீக்கள் வெளியேறி பெண்களை துரத்தின. இதில், 14 பெண்களுக்கு கை, முகம், கழுத்து பகுதியில் கொட்டியதில் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும், மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT