சாலை பாதுகாப்பு விழிப்புணா்வையொட்டி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த பாளையம் சுங்கச் சாவடியில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
சுங்கச் சாவடி மேலாளா் நரேஷ் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி முகாமைத் தொடக்கிவைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன் ஆகியோா் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், ரத்த தானத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனா்.
சுங்கச் சாவடி ஊழியா்கள், பணியாளா்கள், ஓட்டுநா்கள் என ரத்த தானம் வழங்கிய 85 பேருக்கு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி மருத்துவா்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.