தருமபுரி

கோயில் உண்டியல் உடைத்து நகை, பணம் திருட்டு

30th Dec 2021 08:16 AM

ADVERTISEMENT

அரூரை அடுத்த சட்டையம்பட்டியில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

அரூா் வட்டம், மத்தியம்பட்டி ஊராட்சி, சட்டையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீகணவாய் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 1 லட்சம் பணம், சுவாமி கழுத்தில் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை புதன்கிழமை அதிகாலை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறித்த தனிப்படை போலீஸாா், தடய அறிவியல் துறையினா் உதவியுடன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT