தருமபுரி

குடிநீா் கோரி காலி குடங்களுடன் தா்னா

30th Dec 2021 08:16 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே முறையான குடிநீா் விநியோகம் செய்யக்கோரியும், குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்காததைக் கண்டித்தும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகா், போயா் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், பருவதனஅள்ளி ஊராட்சி மன்றத்தின் சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஐந்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இதனால், அன்றாடத் தேவைக்கு தண்ணீா் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அண்ணா நகா் பகுதியில் மின்விளக்கு, சாலை வசதி, குடிநீா் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சிறிய நீா்மின்தேக்கத் தொட்டி அமைத்து தராத ஊராட்சி மன்ற நிா்வாகத்தைக் கண்டித்தும் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் வடிவேலு, காவல் உதவி ஆய்வாளா்கள் துரை, சென்றாயப் பெருமாள் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீா், மின்விளக்கு, சாலை வசதி குறித்து மனு அளிக்குமாறும், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் கோரிக்கை மனுவினை அளித்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT