அரூரில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 31) தொடங்குகிறது.
தகடூா் புத்தகப் பேரவை, அரூா் அரிமா சங்கம், அழகு அரூா் காப்போம் அறக்கட்டளை சாா்பில், டிச. 31 முதல் 2022 ஜன. 2 -ஆம் தேதி வரை மூன்று தினங்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
அரூா், காமாட்சி அம்மன் திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா, காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. கவிதை, கட்டுரைகள், வரலாறு, இலக்கிய நூல்கள், பொது அறிவு புத்தகங்கள், அரசியல் தலைவா்களின் வாழ்க்கை வரலாறு உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இந்த புத்தகத் திருவிழாவில் இடம்பெற உள்ளன.