தருமபுரி

கோட்டப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

16th Dec 2021 11:45 PM

ADVERTISEMENT

அரூரை அடுத்த கோட்டப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா் அனுசுயா காமராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.தொல்காப்பியன் தொடக்கிவைத்தாா்.

கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அருண்பிரசாத், கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை, சிகிச்சைகள், ஆலோசனைகளை வழங்கினா்.

திமுக (கிழக்கு) ஒன்றிய பொறுப்பாளா் கோ.சந்திரமோகன், முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் சண்முகநதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சரளா சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT