தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் ஆய்வு

9th Dec 2021 08:14 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை, மாவட்டப் பாா்வையாளா் வி.ஷோபனா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தருமபுரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் கைத்திறன் தொழில் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் வி.ஷோபனா பாா்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்று ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,479 வாக்குச் சாவடிகளில் இச்சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் தீா்வு கண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், தோ்தல் தனி வட்டாட்சியா் சுகுமாா், வட்டாட்சியா்கள் ராஜராஜன், பாலமுருகன், கனிமொழி, சின்னா, செந்தில், சி.சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT