தருமபுரி

ஒகேனக்கல் மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற பாமக வலியுறுத்தல்

9th Dec 2021 08:12 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல் மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற பாமக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் எம்.பி.க்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி, மாநிலத் துணைத் தலைவா்கள் பெ.சாந்தமூா்த்தி, பாடிசெல்வம்

ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் ஒகேனக்கல் காவிரியில் மழை காலங்களில் மிகையாகச் செல்லும் ஒகேனக்கல் உபரிநீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல வருகிற டிச. 11-ஆம் தேதி தருமபுரி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தருமபுரிக்கு வருகை தரும் பாமக நிறுவனா் ராமதாஸை வரவேற்க கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT