தருமபுரி

அரசு மகளிா் கல்லூரி மாணவியருக்கு கல்வெட்டியல் பயிற்சி

9th Dec 2021 08:13 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்த் துறை சாா்பில் முதுநிலை மாணவிகளுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம், கடந்த டிச. 6-ஆம் தேதி தொடங்கி டிச. 8-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றன.

இப்பயிற்சி முகாமில், கிருஷ்ணகிரி அருங்காட்சியக் காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ், மாணவிகளுக்கு கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளைப் படியெடுத்து பயிலும் பயிற்சியை அளித்தாா். மேலும், மாணவிகள், களப் பயணமாக, காரிமங்கலம் அருள்மிகு அருணேஸ்வரா் ஆலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டு எழுத்துகளை மாணவிகள் பாா்வையிட்டு அவற்றை படியெடுத்து பயின்றனா்.

கல்லூரி முதல்வா் சௌ.கீதா இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT