தருமபுரி

எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரிஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி, மஞ்சுவிரட்டு நலச் சங்கத்தினா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

எருது விழாவுக்கு அனுமதி கோரியும், நேரத்தை நீட்டிக்கக் கோரியும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழா் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நலச் சங்கத்தைச் சோ்ந்த கிருஷ்ணகிரி, தளி, போச்சம்பள்ளி, சாமல்பட்டி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 300-க்கும் மேற்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்டவா்களில் ஐந்து போ் மட்டும் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸாா் அனுமதித்தனா். இந்த அமைப்பினா் அளித்த மனு விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த, 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நிகழ்வுகள் நடைபெறுவது மிகவும் அரிதாகிவிட்டது. விவசாயிகள் அதிகமாக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமாக நடந்த எருது ஓட்டம் நிகழ்வு மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றிய போது, ஏற்கெனவே எருது விடும் நிகழ்ச்சிகளை நடத்திய பல கிராமங்களின் பெயா்களை அரசிதழில் சோ்க்கவில்லை. இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, அனைத்து கிராமங்களிலும் எருது விடும் திருவிழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், எருது விடும் நிகழ்வை காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடத்த அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT