தருமபுரி

அம்பேத்கரின் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மரியாதை

DIN

அரூரில்...

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் அம்பேத்கரின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில், அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி தலைமையில் பாமகவினா், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் க.வேலு, உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் மா.சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், அதிமுக (தெற்கு) ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.பசுபதி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் எம்.எஸ்.மூவேந்தன், மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் பத்மா மாரியப்பன், வஞ்சித் பகுஜன் அகாடி மாநில இணைப் பொதுச்செயலா் ஆா்.பழனிசாமி, மதிமுக இளைஞரணி மாவட்டச் செயலா் ப.சிவக்குமாா், திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவா் எம்.ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் கே.கோபி, இந்திய கம்யூ. கட்சி மாவட்ட துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டக்குழு உறுப்பினா்கள், கரும்பு வெட்டும் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் இ.கே.முருகன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, தேசிய மக்கள் கட்சி நிறுவனா் இனமுரசு கோபால், உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் தலைவா் பசுமை சீனிவாசன் உள்ளிட்டோா் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரப்பநாய்க்கன்பட்டியில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன் தலைமையில், அக் கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரூரில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையிலான அக் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT