தருமபுரி

மகளிா் கல்லூரியில் ரத்த தானம்

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில், ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் கே.ஜி.காா்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலா் அனுராதா ஆகியோா் பங்கேற்று ரத்த தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து, 17 மாணவியா் ரத்த தானம் வழங்கினா். இவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி குருதி வங்கி சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் மு.செந்தில்குமாா், பேராசிரியா்கள், மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT