தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்துக் குறைவு

DIN

தமிழக நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்துள்ளது.

தமிழக நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், பிலிகுண்டுலு, அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா, வனப் பகுதியில் இருந்து வரும் சிற்றோடைகளில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. கா்நாடக அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நீா்த் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

தற்போது நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 18,000 கனஅடியாக தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது.

புதன்கிழமை 14,000 கனஅடியாகக் குறைந்து வந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT