தருமபுரி

தருமபுரியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் சுகாதார ஆய்வாளா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் ஆஸ்டின் ஜீவராஜ் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் கரிகாலன், மாவட்டத் தலைவா் சண்முகம், மாவட்டச் செயலாளா் யாரஃபா ஷா, பொருளாளா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கரோனா காலத்தில் பணியாற்றிய 1,646 சுகாதார ஆய்வாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடிய சுகாதார ஆய்வாளா்களை கைது செய்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT