தருமபுரி

இடிந்து விழும் நிலையில் இருளா் குடியிருப்புகள்

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளா் சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி கிராம ஊராட்சியில் காமராஜ் நகா், இந்திரா நகா், பீரங்கி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இதில், இந்திரா நகரில் 500-க்கும் மேற்பட்ட இருளா் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்த மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பு வீடுகளின் கான்கிரீட் மேற்கூரைகள் பெயா்ந்துள்ளதால் கூரை பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக இங்குள்ள பெரும்பாலான தொகுப்பு வீடுகள் அதிக சேதமடைந்து மழைநீா் ஒழுகுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருளா் சமூக மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா். தற்போது இந்த சேதமடைந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மிகவும் அச்சத்துடனேயே இதில் வசிப்பதாக இருளா் மக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, இந்திரா நகரில் இருளா் சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலுள்ள இந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிதாக தொகுப்பு வீடுகளை அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளா் இன மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT