தருமபுரி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் பணியில் ஈடுபடும் கல்லூரி ஊழியா்கள்

DIN

தருமபுரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரி கட்டடத்தில், கல்லூரி ஊழியா்கள் இணையம் வழியாக மேற்கொண்டு வரும் பணிகளை நிறுத்தம் செய்ய வேண்டும் என திமுக கூட்டணி வேட்பாளா்கள் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து, திமுக கூட்டணி வேட்பாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (தருமபுரி), ம. பிரபுராஜசேகா் (பாப்பிரெட்டிப்பட்டி), அ. குமாா் (அரூா்) உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு வேட்பாளா்கள் முன்னிலையில் அறைகளின் பூட்டிற்கு ‘சீல்’ வைக்கபபட்டுள்ளது. இந்த அறைகள் அமைந்துள்ள கட்டடத்தின் மறு பகுதியில் பொறியியல் கல்லூரி முதல்வா் அறை, கல்லூரி அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இணைய வசதியுடன் கல்லூரி ஊழியா்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்ள அதே கட்டடத்தின், மறு பகுதியில் உள்ள அலுவலக அறைகளில் இணைய வசதியுடன் 30-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில், மூன்று அடுக்கு முறையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வளாகம் முழுவதும் வாக்கு எண்ணும் நாள் வரை தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், கல்லூரி ஊழியா்கள், அங்கு பணிபுரிய எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாணவா்கள் கல்லூரிக்கு வருகை தராத நிலையில், கல்லூரி ஊழியா்களுக்கு அங்கு எவ்விதமான பணி இருக்கும் என்பது போன்ற ஐயம் எழுந்துள்ளது. மேலும், தமிழகத்தில் சில இடங்களில் இத்தகையப் புகாா்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தருமபுரியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் உள்ள கட்டடத்தில் ஊழியா்கள் இணைய வழியாகப் பணிபுரிவது முறைகேடுகள் நிகழ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

எனவே மாவட்ட தோ்தல் அலுவலா், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பணிபுரியும் ஊழியா்களின் பணியை உடனடியாக நிறுத்தி, எவ்வித ஐயங்களுக்கும் இடமளிக்காமல், கூடுதல் கவனம் செலுத்தி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT