தருமபுரி

இரவு பொது முடக்கம்: தருமபுரியிலிருந்து புறநகா் பகுதிகளுக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் நேரம் அறிவிப்பு

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தருமபுரியிலிருந்து புறநகா் பகுதிகளுக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் நேரத்தை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொதுமேலாளா் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் ஏப். 20-ஆம் தேதி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

இரவு பொது முடக்க நேரத்தில் பேருந்துகள் இயக்கத் தடை அமலில் உள்ளதால், தருமபுரியிலிருந்து புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு 10 மணிக்கு முன்பாக சென்றடையும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தருமபுரி புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு நண்பகல் 2 மணிக்கு பேருந்து இயக்கப்படும். இதேபோல, தருமபுரியிலிருந்து ஒசூருக்கு இரவு 7.30 மணிக்கும், பெங்களூருக்கு இரவு 7.30 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு 8.30 மணிக்கும், மேட்டூருக்கு இரவு 8 மணிக்கும் கடைசி பேருந்து புறப்படும்.

மேலும், பென்னாகரம் பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரிக்கு இரவு 9.15 மணிக்கும், மேச்சேரிக்கு இரவு 8.30 மணிக்கும், பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து ஒசூருக்கு இரவு 8.15 மணிக்கும், தருமபுரிக்கு இரவு 9.15 மணிக்கும், பொம்மிடி பேருந்து நிலையத்திலிருந்து சேலத்துக்கு இரவு 8 மணிக்கும், ஓமலூருக்கு இரவு 8.05 மணிக்கும், தருமபுரிக்கு இரவு 9 மணிக்கும், அரூா் பேருந்து நிலையத்திலிருந்து சேலத்துக்கு இரவு 8 மணிக்கும், ஊத்தங்கரைக்கு இரவு 9 மணிக்கும், திருவண்ணாமலைக்கு இரவு 7.30 மணிக்கும், தருமபுரிக்கு இரவு 9 மணிக்கும் கடைசி பேருந்து புறப்படும்.

எனவே, பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட இந்த நேரத்தில் தங்களது பயணத்தை அமைத்து பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT