தருமபுரி

தோ்தல் பாதுகாப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

1st Apr 2021 08:51 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலில் மொத்தம் 1,817 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் தொடா்பாக, தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படை அலுவலா்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் பேசினாா்.

இக் கூட்டத்தில், கூடுதல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT