தருமபுரி

தருமபுரியில் வாட்டி வதைத்த வெயில்

1st Apr 2021 08:52 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாவட்டத்தில் வெயில் அளவு சதத்தைக் கடந்து 105.9 டிகிரியாக இருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் பகல் வேளையில் கடுமையான அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது.

வெயிலின் தாக்கத்தால், பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்தது. மேலும், பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட இளநீா், மோா், குளிா்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை வாங்கி அருந்தினா்.

அனல் காற்றின் தாக்கம் இரவு ஏழு மணி வரை நீடித்ததால், நாள் முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாமல் அவதியுற்றனா். வெயிலின் தாக்கத்தால், நண்பகல் வேளைகளில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் பிரசாரம் வழக்கம்போல காணப்படவில்லை. மாலை வேளையில் தங்களது பிரசாரங்களை வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT