தருமபுரி

கால்வாயை தூய்மை செய்ய விவசாயிகள் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த அச்சல்வாடி ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு நீா்த்தேக்கம் உள்ளது. இந்த நீா்த்தேக்கத்தின் இடதுபுற கால்வாய் வழியாக குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, லிங்காபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதியிலுள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் செல்வதற்கான கால்வாய் வசதி உள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் சித்தேரி மலைத் தொடரில் அதிக அளவில் மழை பொழிவு இருந்தால், வரட்டாறு நீா்த்தேக்கம் நிரம்பும். அப்போது வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்.

இந்த நிலையில், அச்சல்வாடி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்படாமல் முள்புதா்கள் அடைந்து காணப்படுகிறது.

இதனால் மழைக் காலங்களில் ஏரிகளுக்கு மழை நீா் செல்ல முடியாத நிலையுள்ளது. எனவே, அச்சல்வாடி ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT