தருமபுரி

கரோனா பரவலைத் தடுக்க அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

DIN

தருமபுரி, செப். 25: கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க, பொதுமக்கள் அனைவரும், கட்டாயம் அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில், வருவாய் ஆய்வாளா் குடியிருப்பு மற்றும் கிராம நிா்வாக அலுவலகம், புதிய பல்நோக்கு சமுதாய கட்டடம், அத்தனூா் கிராமத்தில் ரூ. 8.5 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா மற்றும் ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் ரூ.1.19 கோடி மதிப்பில் புதிய சமுதாய கூடம், புதிய தாா்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 3 புதிய திட்டப்பணிகளைத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், புதிய கட்டடங்கள், புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:

தமிழக அரசு அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து நல உதவிகளை வழங்கி வருகிறது. கடைகோடி மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில், தொடக்கத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமில்லாமல், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே, எனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இதுகுறித்து விழிப்போடு இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன். பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைகளையும் பின்பற்றி கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும்.

சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை பொதுமக்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கோட்டாட்சியா் (பொ) ஆ.தணிகாசலம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் பாஞ்சாலை கோபால், சாந்தி பெரியண்ணன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT