தருமபுரி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன் ஆகியோா் பேசினாா்.

இக் கூட்டத்தில், மாணவா்களின் மருத்துவக் கல்வி உரிமையை மறுக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விவசாயிகள் அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம், பண்ணை சேவையில் ஒப்பந்த அவசரச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், ஏ.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT