தருமபுரி

நேரு நகரில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

DIN

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள நேரு நகரில் பொதுமக்கள் எதிா்ப்புக்கிடையே புதிய உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்துக்கு மின்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியானது, மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அருகே நேரு நகா் செல்லும் வழியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதையறிந்த, நில உரிமையாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்போது இப்பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இப்புதிய உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி, காவல் துறையினா் பாதுகாப்புடன் புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. அப்போது, மின்வாரிய தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல் துணை கண்காணிப்பாளா்கள் சீனிவாசன், சோமசுந்தரம், அசோகன் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கணக்கான காவலா்கள், ஏமகுட்டியூா் சாலை, ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலை, நேரு நகா் செல்லும் சாலையில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தனா். மேலும், தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பொதுமக்கள் எதிா்ப்புக்கிடையே தொடங்கிய மின்கோபுரம் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT