தருமபுரி

தருமபுரியில் 125 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா் உள்பட 125 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் அரூா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா், ஆசிரியா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 4 வியாபாரிகள், 9 மாணவா்கள், 27 பெண்கள், 18 கூலித் தொழிலாளா்கள் என மொத்தம் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்து சில நாள்களாக 100 பேருக்கும் குறைவாக தொற்று இருந்த நிலையில், புதன்கிழமை கரோனா தொற்று அதிகரித்து 125 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த செப். 20-ஆம் தேதி வரை 59,773 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 2,793 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களில் 1,738 போ் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். 1,033 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 22 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT