தருமபுரி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தருமபுரியில் 28-இல் ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக தோழமைக் கட்சிகள் சாா்பில் வரும் செப். 28-ஆம் தேதி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரி திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திமுக தோழமைக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை வகித்துப் பேசினாா்.

காங்கிரஸ் நகரத் தலைவா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், மதிமுக மாவட்டச் செயலா் தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட மொத்தம் 26 இடங்களில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்களை நடத்துவது, இதில், அனைத்துக் கட்சியினரும் திரளாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT