தருமபுரி

கல்லூரி மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தருமபுரி: கல்லூரி, தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்ட மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்பட்ட, மிகப்பிற்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்பட்ட, மிகப் பிற்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2,00,000 மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை கோரி, விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை அவரவா் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற நவ.10-க்குள் புதுப்பிக்க வேண்டும். இதேபோல புதிய பதிவுகளை நவ. 30-க்குள் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிச. 15-ஆம் தேதிக்கு முன்பும், புதிய பதிவுகளுக்கான விண்ணப்பங்களை ஜன. 31 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் கேட்புகளை சமா்ப்பிக்க வேண்டும். இத்திட்டங்கள் குறித்த விவரங்களை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT