தருமபுரி

பொது முடக்கக் கால நிவாரணம் கோரி இடதுசாரி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரி: கரோனா பொது முடக்கக் கால நிவாரணமாக ரூ. 7,500 வழங்கக் கோரி, தருமபுரியில் சனிக்கிழமை இடதுசாரிக் கட்சியினா் ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். தேவராஜன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.டில்லிபாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.

கரோனா பொது முடக்கக் காலத்தை பயன்படுத்தி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள, தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சாரத் திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தில் உள்ள வட்டார மையங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT