தருமபுரி

நூறுநாள் வேலை திட்டப் பணித்தளப் பொறுப்பாளா் மாற்றம் : தொழிலாளா்கள் தா்னா

DIN

அரூா்: கடத்தூா் அருகே நூறுநாள் வேலை திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளா் மாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தொழிலாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், தாளநத்தம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தில் தொழிலாளா்கள் செய்யும் வேலைகளை நாள்தோறும் கணக்கெடுப்பு செய்வதற்காக பணித்தளப் பொறுப்பாளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில், தாளநத்தம் ஊராட்சியில் ஏற்கனவே பணித்தள பொறுப்பாளா்களாக உள்ளவா்களை ஊராட்சி நிா்வாகம் திடீரென மாற்றம் செய்துள்ளதாம். இதையெடுத்து, 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்கள் பணித்தளப் பொறுப்பாளா்கள் மாற்றுத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே தா்னாவில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவா் பாப்பாத்தி பாலு, கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் மற்றும் காவல் துறையினா் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பிறகு, அரசு அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு பிறகு நூறுநாள் திட்டத் தொழிலாளா்கள் தா்னா போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT