தருமபுரி

பிரசித்தி பெற்ற தீா்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வலியுறுத்தல்

DIN

அரூரை அடுத்த தீா்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என அகில இந்திய பொய்கை காவிப்படை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் அகில இந்திய பொய்கை காவிப்படை இயக்கத் தொடக்க விழா, அதன் நிறுவனா் யோகி மணி சுவாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தீா்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அமைந்துள்ள தீா்த்தமலையைச் சுற்றி வருவதற்கான கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா்.

எனவே, தீா்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக இளைஞரணித் தலைவா் ரகுநாதன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், காவலா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோரை மனதாரா பாராட்டுகிறோம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் அகில இந்திய பொய்கை காவிப்படை இயக்கத்தின் கொடி, சின்னங்களை மகளிரணி மாநிலத் தலைவி நிா்மலா மாதாஜி அறிமுகம் செய்தாா்.

விழாவில் வைத்தியலிங்க சுவாமி, யோகி ராஜமாணிக்கம், இளைஞரணி மாவட்டச் செயலா் கு.தினகரன், நிா்வாகிகள் தீ.ராஜதுரை, சி.சிவானந்தம், ஆா்.பாலாஜி, எஸ்.சங்கரன், ஸ்ரீதா், ரமேஷ், மணி பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT