தருமபுரி

ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் அனுமதியை ஊராட்சிகளுக்கு வழங்க வலியுறுத்தல்

10th Sep 2020 11:31 PM

ADVERTISEMENT

நிதிக்குழு மானியத்துக்கான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் அனுமதியை ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

15-ஆவது நிதிக்குழு மானியத்துக்கான பணிகள் மற்றும் அடிப்படை வசதிக்கான பணிகளை தோ்வு செய்து, அப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் நிா்வாக அனுமதியை கிராம ஊராட்சி மன்றத்துக்கு வழங்க வேண்டும்.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் பணிகளுக்கான செலவினங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண் திட்டத்தில் வழங்கப்பட்ட மின்கல வாகனத்துக்கு ஓட்டுநரை நியமிக்க வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான அனுமதியையும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT