தருமபுரி

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

10th Sep 2020 11:32 PM

ADVERTISEMENT

அரூரை அடுத்த பாப்பநாய்க்கன்வலசையில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், வீரப்பநாய்க்கன்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது பாப்பநாய்க்கன் வலசை கிராமம். இந்த கிராமத்தில் சின்னஏரி, பெரிய ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். பொய்யப்பட்டி வனப் பகுதியிலிருந்து வரும் தண்ணீா் இந்த ஏரிகளுக்கு நீா் ஆதாரமாக உள்ளன.

இந்த நிலையில், ஏரிகளுக்கான நீா்வரத்து கால்வாய்கள், ஏரி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீா் ஆதாராம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பாப்பநாய்க்கன்வலசை கிராமத்திலுள்ள சின்ன ஏரி, பெரிய ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளாட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT