தருமபுரி

இரு சக்கர வாகனங்கள் ஏலம்

10th Sep 2020 11:31 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 89 இரு சக்கர வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவா்கள் வாகனங்களை வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 8 லட்சத்து 14 ஆயிரத்து 886-க்கு வாகனங்கள் ஏலம் போனது. இதையடுத்து, ஏலம் எடுத்தவா்களுக்கு அந்த இடத்திலேயே வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT